பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலைய வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி வாலிபர் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில், போலீஸ் நிலைய வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி வாலிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2020-06-02 22:45 GMT
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டையில், போலீஸ் நிலைய வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி வாலிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் பத்திரமாக கீழே இறக்கி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 32). இவர், ஒப்பந்த அடிப்படையில் பட்டுக்கோட்டை நகராட்சியில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவர் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த மாதம்(மே) 16-ந் தேதி பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் உள்ள 250 அடி உயரம் உள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மணிகண்டனிடம் போலீசாரும், அதிகாரிகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை கோபுரத்தில் இருந்து கீழே இறக்கினர்.

அதேபோல நேற்றும் அதிகாலை 4 மணிக்கு மணிகண்டன், போலீஸ் வயர்லெஸ் போபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டார். பிறகு போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் காலை 1 மணி நேரம் கழித்து 5 மணிக்கு கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்