விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் முதல் பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஏற்கனவே பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில், தமிழகத்தில் எப்போது பஸ்கள் ஓடும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதில் ஒன்றாக தமிழகத்தில் 1-ந்தேதி முதல்(அதாவது நேற்று) பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கென 8 மண்டலங்களாக பிரித்து அந்தந்த மண்டலத்திற்குள் மட்டும் 50 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தில் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
இதையொட்டி அந்தந்த பணிமனைகளில் இருந்த பஸ்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் பணிமனைகளில் இருந்து பஸ்கள் புறப்பட்டன. முன்னதாக பணிக்கு வந்த டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான முக கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் ஆகியனவும் வழங்கப்பட்டது. காலை 6 மணி முதல் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் மொத்தம் 3,054 பஸ்கள் உள்ளன. இவற்றில் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மண்டல பகுதிகளில் 274 நகர பஸ்களும், 549 புறநகர் பஸ்களும், 11 மலை வழித்தட பஸ்களும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மண்டல பகுதிகளில் 121 நகர பஸ்களும், 102 புறநகர் பஸ்களும் என மொத்தம் 1,057 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இயக்கப்பட வேண்டிய பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. விழுப்புரம் மண்டலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 750 பஸ்களில் விழுப்புரம் மாவட்டத்தில் 185 பஸ்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 150 பஸ்களும் என 2 மாவட்டங்களிலும் மொத்தம் 335 பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கவும், அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்சில் ஏறிச்செல்ல வேண்டும் என்பதற்காகவும் பஸ் நிலையங்களில் ஒரு மீட்டர் இடைவெளியில் அடையாள குறியீடுகள் போடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி 60 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதுபோல் பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாகத்தான் பயணிகள் உள்ளே ஏறுவதற்கும், பஸ்சில் இருந்து இறங்கும்போது முன்பக்க படிக்கட்டு வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதால் இந்த நடைமுறையை பயணிகள் கடைபிடித்தனர்.
இவர்கள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாக அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கென போக்குவரத்துக்கழகம் தனியாக ஒரு குழுவை நியமித்துள்ளது. அந்த குழுவினர், பயணிகள் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே பஸ்சிற்குள் ஏற அனுமதித்தனர்.
இந்த சோதனை முடிந்த பிறகு பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி திரவ பாட்டிலை எடுத்து ஒவ்வொரு பயணியும் தங்கள் கைகளை நன்கு சுத்தம் செய்த பிறகே இருக்கையில் அமர்ந்தனர். அதுபோல் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணம் செய்தனர்.
குறிப்பாக ஒவ்வொரு பஸ்சிலும் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்தனர். அதாவது 52 இருக்கைகள் அடங்கிய பஸ்சில் 32 பயணிகளும், 44 இருக்கைகள் அடங்கிய டவுன் பஸ்களில் 26 பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
இதனிடையே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இதேபோல் திண்டிவனம், செஞ்சியில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. பயணிகள் பல்வேறு பரிசோதனைக்கு பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் திண்டிவனத்தில் பயணிகள் கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி நேரில் பார்வையிட்டார். இதற்கிடையே தனியார் பஸ்கள் ஓடவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று தனியார் பஸ்களை இயக்க அவற்றின் உரிமையாளர்கள் முன்வரவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கிராம புறங்களுக்கு 20 பஸ்களும், கடலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு 30 பஸ்களும் இயக்கப்பட்டன.
கொரோனா அச்சத்தால் பஸ்சில் பயணம் செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சில பஸ்களில் 5 முதல் 10 பேர் மட்டுமே பயணம் செய்தனர். முன்னதாக பயணிகளுக்கு காய்ச்சல் ஏதும் உள்ளதா? என்று பரிசோதனை செய்த பின்னரே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே நேரத்தில் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த சில பஸ்களில் பயணிகள் யாரும் இல்லாமல் இயங்கியதையும் பார்க்க முடிந்தது. இதேபோல் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டன. இது தவிர கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.