மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடக்கம்

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

Update: 2020-05-31 05:54 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

ரெயில் போக்குவரத்து

கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மார்ச் 25-ந் தேதி முதல் ரெயில் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.

தற்போது சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் ரெயில் இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரெயில் உள்பட 4 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ஜனசதாப்தி ரெயில் இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும். இதற்கான முன்பதிவு மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மாலை தொடங்கியது.

முக கவசம் கட்டாயம்

ரெயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வந்தவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். ரெயிலில் பயணம் செய்யும்போதும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும், பயணத்துக்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி ரெயிலுக்கு வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.175 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்