உத்தமபாளையம், பெரியகுளத்தில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் சாவு

உத்தமபாளையம் மற்றும் பெரியகுளத்தில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2020-05-30 06:00 IST
உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 36). இவர், உத்தமபாளையம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று அங்கு ஒரு மோட்டார் சைக்கிளை பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கினார். உடனே அவர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 44). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர், கிரைண்டரில் சட்னிக்காக தேங்காய் அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்