மாவட்டம் முழுவதும் 18 துணை தாசில்தார்கள் இடமாற்றம்
மாவட்டம் முழுவதும் 18 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் மாற்றப்பட்ட நிலையில், 18 துணை தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி நத்தம் தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கஈஸ்வரி நிலக்கோட்டை தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றும் டேனியல்பிரேம்குமார் நத்தம் வட்ட வழங்கல் அலுவலராகவும், திண்டுக்கல் கிழக்கு வட்ட வழங்கல் அலுவலர் முகமதுஅலி வேடசந்தூர் தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றும் பாண்டியராஜ் கலெக்டர் அலுவலக டி பிரிவுக்கும், அங்கு பணியாற்றும் சுல்தான்சிக்கந்தர் திண்டுக்கல் மேற்கு மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
மேலும் திண்டுக்கல் மேற்கு மண்டல துணை தாசில்தார் முத்துமுருகன் ஆத்தூர் தேர்தல் பிரிவுக்கும், குஜிலியம்பாறை தலைமையிடத்து துணை தாசில்தார் மரியஜான்சன் திண்டுக்கல் கிழக்கு மண்டல துணை தாசில்தாராகவும், அந்த பதவியில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் மேற்கு தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றும் பாபு நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், வேடசந்தூர் தலைமையிடத்து துணை தாசில்தார் நாட்ராயன் குஜிலியம்பாறை தேர்தல் பிரிவுக்கும், கொடைக்கானல் தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகம் குஜிலியம்பாறை மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை
அதேபோல் கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளர் சரவணக்குமார் நிலக்கோட்டை மண்டல துணை தாசில்தாராகவும், அந்த பதவியில் இருக்கும் ருக்குமணி கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளராகவும், துணை தாசில்தார் பானுலட்சுமி நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அந்த பதவியில் இருக்கும் ராமசாமி பழனி மண்டல துணை தாசில்தாராகவும், அந்த பதவியில் இருக்கும் மணி ஒட்டன்சத்திரம் தேர்தல் பிரிவுக்கும், அந்த பதவியில் இருக்கும் விஜயலட்சுமி திண்டுக்கல் மேற்கு வட்ட வழங்கல் அலுவலராகவும், அந்த பதவியில் இருக்கும் செந்தமிழ்செல்வி ஒட்டன்சத்திரம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.