கோவில்களை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வடமதுரையில் கோவில்களை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-29 23:17 GMT
வடமதுரை,

ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து இந்து கோவில்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் நாகராஜ், தலைவர் மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோவில்களை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய இளைஞரணி தலைவர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கட்சி நிர்வாகிகள் உடலில் வேப்பிலை கட்டி பால் குடங்களை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் வேடசந்தூர் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள திரிசூலத்தின் மீது பாலை ஊற்றி அவர்கள் வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்