தானிப்பாடியில் ஊரடங்கை மீறி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் 30 பேர் கைது

ஊரடங்கை மீறி தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-29 20:30 GMT
தண்டராம்பட்டு,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். இலவச இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும். ஆட்டோக்களுக்கு தணிக்கை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் தானிப்பாடி போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 ஆட்டோ டிரைவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்