மீன் கொள்முதல் கம்பெனிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மீன்களை கொள்முதல் செய்வது தொடர்பாக மீன் ஏற்றுமதி கம்பெனிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பனைக்குளம்,
மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் அப்துல் ஹனான், பாலன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் விஜயரூபன், பாலசுப்பிரமணியன், செய்யது சுல்தான், செல்வக்குமார், நாகராஜன், சதக்கத்துல்லா, காதர் முகைதீன், தொத்திரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வருகிற 1-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழக அரசு செயல்படுத்த அறிவித்துள்ளது.
ஆனால் மண்டபத்தை பொறுத்தவரை இங்குள்ள படகுகளில் பாதிக்கு மேற்பட்டவை கரையில் ஏற்றப்பட்டு பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பின் காரணமாக கடலுக்கு செல்ல தேவையான தளவாட பொருட்கள் எதுவும் இன்றுவரை கிடைக்காத நிலை இருந்து வருகிறது. எனவே வழக்கம் போல ஜூன் 15-ந்தேதி முதல் தான் படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான சூழல் உள்ளது. மேலும் போக்குவரத்து வசதி இல்லாததால் மீன்பிடி தொழிலாளர்களும் வெளியூர்களில் இருந்து வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீர்மானம்
விசைப்படகுகள் பிடித்து வரும் இறால் மற்றும் அனைத்து வகை மீன்களையும் கொள்முதல் செய்வதற்கு ஏற்றுமதி கம்பெனிகள் அதற்கான வழிமுறைகளை வகுக்கவில்லை. எனவே இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்றுமதி கம்பெனிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.2000 வழங்கிய தமிழக அரசுக்கும், மீனவர்கள் நலனை மேம்படுத்த ரூ.2000 கோடி அறிவித்த மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.