மாவட்டம் முழுவதும் 15 தாசில்தார்கள் இடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 15 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-29 02:31 GMT
திண்டுக்கல்,


தாசில்தார்கள் இடமாற்ற விவரம் வருமாறு:-

தாசில்தார்கள் மாற்றம்

அதன்படி திண்டுக்கல் கிழக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அபுரிஸ்வான் மேற்கு தாசில்தாராகவும், மேற்கு தாசில்தார் பாண்டிச்செல்வி டாஸ்மாக் மேலாளராகவும், டாஸ்மாக் மேலாளர் சுதாலீலாவதி திண்டுக்கல் கிழக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நல தாசில்தார் சக்திவேலன் குஜிலியம்பாறை தாசில்தாராகவும், குஜிலியம்பாறை தாசில்தார் சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மேற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் ஆத்தூர் தாசில்தார் அரவிந்த் கொடைக்கானல் தாசில்தாராகவும், கொடைக் கானல் தாசில்தார் வில்சன் தேவதாஸ் கொடைக்கானல் குடிமைப்பொருள் தாசில்தாராகவும், கொடைக்கானல் குடிமைப்பொருள் தாசில்தார் சசி கொடைக்கானல் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கண்ணன் திண்டுக்கல் கிழக்கு தாசில்தாராகவும், திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் மீனாதேவி நெடுஞ்சாலை நிலம்எடுப்பு தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை

அதேபோல் நெடுஞ்சாலை நிலம்எடுப்பு தாசில்தார்களான பவித்ரா ஆத்தூர் தாசில்தாராகவும், லதா வேடசந்தூர் தாசில்தாராகவும், சரவணன் திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராகவும், வேடசந்தூர் தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் நெடுஞ்சாலை நிலம்எடுப்பு தாசில்தார்களாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்