6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பீகார் வாலிபர் கைது

நாமக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-29 02:31 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கணேஷ் (வயது 22) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நண்பர்களை பார்க்க கோழிப்பண்ணைக்கு சென்ற கணேஷ், அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்