திண்டுக்கல்லில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2020-05-29 01:58 GMT
திண்டுக்கல்,

ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் காலை முதல் மாலை வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், சில இடங்களில் நெரிசல் ஏற்படுகிறது. இது கொரோனா பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, அதை தவிர்க்கும் வகையில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்களை முழுமையாக ஈடுபடும்படி தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள், தங்களுடைய தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மெயின்ரோடு, ரதவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதற்காக தீயணைப்பு வீரர்கள் கவச உடை அணிந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்