வேளாண் விற்பனை மையத்திற்கு நிலக்கடலை வரத்து அதிகரிப்பு
புதுவை தட்டாஞ்சாவடி வேளான் விற்பனைக் கூடத்திற்கு நேற்று நிலக்கடலை வரத்து அதிகமாக இருந்தது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய வேளாண் விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தட்டாஞ்சாவடி, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், மதகடிப்பட்டு, கன்னியக்கோவில் உள்ளிட்ட இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நெல் அறுவடை முடிந்த நிலையில் இந்த காலகட்டத்தில் ஆகஸ்டு மாதம் வரை இந்த மையங்களில் நெல் விற்பனை களைகட்டும். நாளொன்றுக்கு 800 மூட்டை முதல் 1,000 மூட்டை வரை விற்பனைக்கு வரும். இதேபோல் நிலக்கடலை, பயறு வகைகளும் விற்பனை செய்யப்படும். நெல் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை அதிக அளவில் விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
புதுவையில் உள்ள வேளாண் விற்பனை குழு மையங்களுக்கு புதுவையை போல் தமிழக விவசாயிகளும் அதிக அளவில் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை முன்புபோல் தடையின்றி கொண்டுவர முடியவில்லை. இதனால் இங்கு வரும் நெல்லின் அளவு பாதியாக குறைந்து விட்டது. நெல் வரத்து குறைவாக இருந்தாலும் வழக்கம்போல் வியாபாரிகள் வந்து அதை கொள்முதல் செய்கின்றனர்.
அதே நேரத்தில் நிலக்கடலை, பயறு வகைகள் வழக்கம்போல் அதிகமாக வருகின்றன. விருத்தாசலம் மார்க்கெட்டில் விளை பொருட்கள் என்ன விலைக்கு விற்பனை ஆகிறதோ அதற்கேற்ப விலை நிர்ணயித்து உரிய தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது.
நெல்வரத்து குறைவுக்கு அதிகாரிகள் தரப்பில் வேறொரு காரணம் கூறப்படுகிறது. அதாவது இந்திய உணவு கழகம் சார்பில் புதுவையில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தட்டாஞ்சாவடி கன்னியக்கோவில், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் மதகடிப்பட்டு, கரையாம்புத்தூர் பகுதிகளில் நெல் கொள்முதலை தொடங்கிவிட்டனர்.
கரையாம்புத்தூர் மதகடிப்பட்டு பகுதிகளில் இந்திய உணவு கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நெல்லின் வரத்து குறைந்துள்ளது. விரைவில் கன்னியக்கோவில் மற்றும் கூனிச்சம்பட்டு பகுதியிலும் இந்திய உணவுக்கழகம் விரைவில் நெல் கொள்முதல் செய்ய உள்ளது. அங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் போது விவசாயிகள் நகரப் பகுதிக்கு வண்டிகளில் நெல் கொண்டு வந்து விற்பனை செய்வது குறையும் என்று தெரிவிக்கின்றனர்.