கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-05-28 04:28 GMT
கள்ளக்குறிச்சி,

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு தலைமை தாங்கினார். பொறுப்பாளர் முனியபிள்ளை, நகர செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை நிர்வாகத்துறையோடு இணைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி பயிர் கடன் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய வரி பாக்கி மற்றும் கொரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கஜேந்திரன், ரீத்தா, சுப்பிரமணி, மஞ்சப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்கராபுரம் வட்ட கிளை சார்பில் கொசப்பாடி கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார்.

 இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கோவிந்தன் உள்பட 6 பேரை சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்