மளிகை கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் 14 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

மளிகை கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் 2 மர்ம நபர்கள், 14 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.

Update: 2020-05-27 23:45 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் புழல் காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வெளியில் சென்று விட்டதால் கடையில் அவருடைய மனைவி செல்வி(வயது 52) மட்டும் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், குளிர்பானம் வாங்குவதுபோல் நடித்து செல்வியின் கழுத்தில் கிடந்த 14 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் மாதவரம் குமரன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சாந்தி(56). நேற்று அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்