திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர தலைவர் மடப்புரம் சம்பத் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மதியழகன், பொதுக்குழு உறுப்பி்னர் ரமேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சம்பந்தம், நகர துணை செயலாளர் பாஸ்கரன், காமராஜ் பவன் நிர்வாகி குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் சுகுமார், பொதுச்செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசின் புதிய மின்சார சீர்திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
முத்துப்பேட்டை
இதேபோல் முத்துப் பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்பாட்டத்திற்கு விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் சேக்பரீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாயத்து ராஜ் சங்க தஞ்சை மண்டல அமைப்பாளர் தாஹிர் தலைமை தாங்கினார். முத்துப்பேட்டையை அடுத்த குன்னலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வடுகநாதன் தலைமை தாங்கினார். தில்லைவிளாகம் கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதயமார்த்தாண்டபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் ரெட்டி தலைமை தாங்கினார்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரை வேலன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். இதில் நகர காங்கிரஸ் செயலாளர் வீரையன், வட்டார காங்கிரஸ் செயலாளர் முருகன், நகர இளைஞர் காங்கிரஸ் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.