நரம்பை கடற்கரையில் சாலை அமைக்க திட்டம்; அமைச்சர் கந்தசாமி ஆய்வு
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பனித்திட்டு-நரம்பை மீனவ கிராமங்களுக்கு இடையே, சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகூர்,
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்குள் சாலைகள் அமைக்க தடை விதித்து உள்ளது. இதனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசு நிபந்தனைகளின் படி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் கந்தசாமி தலைமையில் சுற்றுச்சூழல் செயலாளர் சுனிதா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், பாகூர் தாசில்தார் குமரன், புதுச்சேரி நகரமைப்பு குழும செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நரம்பை கடற்கரைக்கு சென்று சாலைகளை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
அதனைதொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நரம்பை மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் ஆலோசனை நடத்தி, கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த திட்டம் தொடர்பாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அனுமதி கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.