இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்

கோவில்களை திறக்கக்கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-26 23:45 GMT
செங்கல்பட்டு, 

இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை திறக்க வலியுறுத்தி செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.ராஜா தலைமையில் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும். தோப்புக்கரணம் போட்டும் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் தியாகு, ரத்திஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாராய கடையை திறக்கும் மாநில அரசு கோவில்களை திறக்க வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் எதிரே இந்து முன்னணி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் சார்பில் மூடப்பட்ட கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல் சோழவரம் ஒன்றியம், ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோவில் அருகே மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் சுவாமிகள் தலைமையில் வக்கீல் ருத்ரமூர்த்தி உள்ளிட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்