கம்மியம்பேட்டையில் பரபரப்பு; ஆயுதங்களுடன் இளைஞர்கள் மோதல்
கம்மியம்பேட்டையில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடலூர்,
இதில் ஒரு தரப்பினர் தங்களது வீடுகளுக்கு சென்று கத்தி, அரிவாள், கம்பி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் அருகே ஓடி வந்தனர். இதை பார்த்த மற்றொரு தரப்பினரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தனர்.
கடலூர் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் அருகில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாலிபால் விளையாடினர். இருள் சூழ தொடங்கியதும் இளைஞர்கள் விளையாட்டை முடித்துக்கொண்டனர். பின்னர் அதே வாலிபால் மைதானத்தில் அமர்ந்து இளைஞர்கள் சிலர் மது குடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது முற்றி கைகலப்பாக மாறியது. இதில் இளைஞர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். நேரம் செல்ல, செல்ல மோதலாக மாறியது.
இதில் ஒரு தரப்பினர் தங்களது வீடுகளுக்கு சென்று கத்தி, அரிவாள், கம்பி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் அருகே ஓடி வந்தனர். இதை பார்த்த மற்றொரு தரப்பினரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தனர்.
பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் சினிமா காட்சி போல் இளைஞர்கள் இரு தரப்பினரும் எதிர், எதிர் திசையில் ஓடிவந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் இரு தரப்பினரையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இளைஞர்கள் ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து, ஆயுதங்களுடன் நின்றிருந்த இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். இதில் இளைஞர்கள் நாலாபுறமும் ஓடி தலைமறைவானார்கள்.
தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கம்மியம்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.