மணப்பாறை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை கொலை செய்தது அம்பலம் போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

மணப்பாறை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை கல்லால் அடித்துக்கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக 14 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-26 02:52 GMT
மணப்பாறை, 

மணப்பாறை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை கல்லால் அடித்துக்கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக 14 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

படுகாயத்துடன் கிடந்த சிறுமி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலை, அவருடைய வீட்டின் அருகில் உள்ள மல்லிகை தோட்டத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் அந்த சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள்.

இதை அந்த சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் 14 வயது சிறுவன் ஒருவன், அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளான். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

கொலை செய்யப்பட்டது அம்பலம்

இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அங்கு ரத்தக்கறை படிந்த சட்டை கிடந்தது. அதை வைத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது, அந்த சிறுமி ஆசைக்கு இணங்க மறுத்ததால் அந்த சிறுவன், அவளை கல்லால் அடித்து கொலை செய்தது அம்பலமானது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், சிறுவன் மீது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்