பால் கொள்முதல் நிலையம் முன்பு தர்ணா
ராசிபுரம் அருகே இரவில் பால் கொள்முதல் நிலையம் முன்பு தர்ணா நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் பகுதியில் தனியார் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு பெரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் ஊற்றி வந்தனர். இவர்களுக்கு பால் கொள்முதல் நிலையத்தினர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக பால் ஊற்றியவர்களுக்கு பணத்தை நேரிலோ அல்லது வங்கி கணக்கிலோ செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
பால் ஊற்றுபவர்கள், கொள்முதல் நிலையத்தின் மேற்பார்வையாளரிடம் பணம் கேட்டு வந்துள்ளனர். அதற்கு அவர் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை வரை பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. பணம் தராமல் காலதாமதம் செய்து வருவதாலும் ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியும், உடனடியாக பணம் வழங்கவேண்டும் என்றும் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கேனுடன் தரையில் அமர்ந்து பால் ஊற்றுபவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் கொள்முதல் நிலையத்தின் மேற்பார்வையாளரையும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தங்களுக்கு பணத்தை வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டனர். இரவில் நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.