கார் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம் ; வாலிபர் கைது
காரிமங்கலம் அருகே கார் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்ததில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரிமங்கலம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 22). இவர் கடந்த 22-ந்தேதி தனக்கு சொந்தமான காரில் காரிமங்கலம் நோக்கி புறப்பட்டார்.
காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. வாலிபர் அரவிந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரண்யா காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் அரவிந்தை கைது செய்தனர்.