அடிமாலி அருகே இறந்தவர் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்கி மோசடி

அடிமாலி அருகே இறந்த ஒருவரின் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்கி மோசடி செய்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Update: 2020-05-25 22:46 GMT
அடிமாலி, 

அடிமாலி அருகேயுள்ள கல்லார்குட்டி பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்படுகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் வழங்கல் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 2017-ம் ஆண்டு இறந்த முதிரப்புழாவை சேர்ந்த ராமன் பாஸ்கர் என்பவருடைய ரேஷன் கார்டுக்கு அரசின் இலவச அரிசியை வழங்கி மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிமம் ரத்து

மேலும் அந்த கார்டுக்கு அரசு வழங்கிய 17 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடிக்கு கடையின் ஒப்பந்தக்காரர் உடந்தையாக இருப்பதை அறிந்த வழங்கல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்