குடிநீர் குழாயில் உடைப்பு; சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

காரைக்கால் மரைக்காயர் வீதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது.

Update: 2020-05-24 23:16 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் போது முறையாக கையாளப்படவில்லை. இதனால் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது.

மேலும் பிற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் கலங்கலாக கிடைக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு மக்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் செய்திகள்