காலாவதியான மாத்திரைகள் விற்ற மருந்து கடைக்கு ‘சீல்’

ஓசூரில் காலாவதியான மாத்திரைகள் விற்ற மருந்து கடைக்கு ‘சீல் வைக்கப்பட்டது.

Update: 2020-05-21 00:40 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஹிமாகிரி லே-அவுட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடைக்கு சென்று நேற்று மாத்திரை வாங்கினார். அதை வீட்டிற்கு எடுத்து சென்று பார்த்த போது, அந்த மாத்திரைகள் காலாவதியானது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் மீண்டும் அந்த மருந்து கடைக்கு சென்று, வயிற்று வலி மாத்திரையை வாங்கி பார்த்தார். அப்போது அதுவும் காலாவதியானது தெரிந்தது. இதுகுறித்து அவர் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் புகார் செய்தார். 

அதன்பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பூபதி, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் விரைந்து சென்று மருந்து கடையில் சோதனை செய்தனர். அப்போது, காலாவதியான மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் அந்த மருந்து கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்