செங்குன்றத்தில் ஆஸ்திரேலிய நாட்டு ஆந்தை பிடிபட்டது
ஆஸ்திரேலிய நாட்டு ஆந்தை ஒன்று செங்குன்றத்தில் பிடிபட்டது.
செங்குன்றம்,
செங்குன்றம் காமராஜர் நகர் கட்டபொம்மன் 1-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் ஆஸ்திரேலிய நாட்டு ஆந்தை ஒன்று பறந்து வந்து விழுந்தது. இதை கண்ட நாய்கள், ஆந்தையை கடித்து குதற முயன்றன. அங்கிருந்த பொதுமக்கள், நாய்களை விரட்டி விட்டு ஆந்தையை காப்பாற்றினர்.
ஆஸ்திரேலிய நாட்டு ஆந்தையை கண்டு வியந்த பொதுமக்கள், இதுபற்றி செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று ஆந்தையை லாவகமாக பிடித்த னர். பின்னர் அதை சென்னையில் உள்ள புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.