தாசில்தாரிடம் தகராறு செய்தவர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது.
பொம்மிடி,
பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, வருவாய் ஆய்வாளர் சகீமா, சர்வேயர் சின்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் அப்சரா ஆகியோர் இதுதொடர்பாக ஆய்வு நடத்த சென்றனர். அப்போது பார்த்திபன், அவருடைய நண்பர் திருமுருகன் (35) ஆகிய 2 பேர் ஆய்வு நடத்திய அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தாசில்தார் கற்பகவடிவு ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்தனர். தலைமறைவான பார்த்திபனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.