மும்பையில் ஒரேநாளில் 1,411 பேருக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது.;

Update: 2020-05-19 23:41 GMT
மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 2 ஆயிரத்து 100 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் மராட்டியத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது.

இதில் தலைநகர் மும்பையில் 3-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று நகரில் புதிதாக 1,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 563 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மும்பையில் மேலும் 43 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 29 பேர் ஆண்கள். 14 பேர் பெண்கள். இதுவரை நகரில் 800 பேர் நோய் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் மும்பையில் 600 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 6 ஆயிரத்து 116 பேர் குணமாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்