கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Update: 2020-05-19 00:29 GMT
கொடைக்கானல், 

கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. இதை தொடர்ந்து பரவலான மழை பெய்தது. பலத்த காற்றுக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் மின்சார வயர்கள் மீது விழுந்து மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. தகவலறிந்த மின்வாரிய உதவி செயற் பொறியாளர் மேத்யூ தலைமையில் ஊழியர்கள் உடனே விரைந்து சென்று மரக்கிளைகளை அகற்றினர். இதேபோல் வடமதுரை ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் தகர ஆஸ்பெட்டாஸ் சீட்டில் பயணிகள் நிழற்கூடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வடமதுரை பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பயணிகள் நிழற்கூடம் தூக்கி வீசப்பட்டது. ஊரடங்கில் ரெயில் சேவை இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காற்றில் பறந்த பயணிகள் நிழற்கூடத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்