பழனியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

பழனி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2020-05-18 23:43 GMT
பழனி, 

பழனி நகர் பகுதியில் பெரும்பாலான மளிகை கடைகள், டீக்கடைகளில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து ஆணையர் லட்சுமணன் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று நகர்நல அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் பழனி பஸ்நிலையம், காந்தி மார்க்கெட், ஆர்.எப். சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு பயன்படுத்திய பாலித்தீன் பைகள், டீக்கப்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பாலித்தீன் பைகள் பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி சுமார் 54 கடைகளில் இருந்து 100 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களில் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்