புதுக்கோட்டை விநாயகர் சிலை கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளக்கரையோரத்தில் விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே எரிச்சியில் உள்ள குளத்தின் கரையோரத்தில் கற்சிலை ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அந்த கற்சிலையை தோண்டி எடுத்து பார்த்த போது விநாயகர் சிலை என்பது தெரியவந்தது.
இந்த சிலை குறித்த விவரம் எதுவும் தெரியாததால், அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் அந்த விநாயகர் சிலையை அரசமரத்திற்கு கீழ் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.