மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது
டெல்லி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பெரம்பலூர்,
டெல்லி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்ய, மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.
அப்போது பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள அறையில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பலூர் மெயின்ரோட்டை சேர்ந்த சந்திரசேகரை (வயது 55) போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் அந்த டாஸ்மாக் கடையின் பாரில் வேலை செய்து வந்தவர் என்று கூறப்படுகிறது.