மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஜ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-16 22:15 GMT
கோவை,

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதில் காலதாமதம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கை, தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களை அமல்படுத்தும் மத்திய அரசையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் மாநில அரசுயை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேற்று அறவழி முழக்கப் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி, கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் அபுதாஹிர், மண்டல செயலாளர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் முகம்மது இசாக், மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல அத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் ஷானவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கள் அன்ஷர் செரீப், மற்றும் அப்துல் காதர், மாவட்ட செயலாளர் முகமது இக்பால், தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த அறவழி முழக்க போராட்டங்களில் சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் பலரும் குடை பிடித்தபடி கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் போலீசார் உக்கடம் மற்றும் ஆத்துப்பாலம் பகுதிகளில் மட்டுமே அனுமதி அளித்தனர். மற்ற பகுதிகளில் அவரவர் வீடுகளின் முன்பும், அலுவலகங்கள் முன்பும் குடையை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்