நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-16 23:49 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 பேர் சிகிச்சை

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 3 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்குள் வருவோர்களை பரிசோதனை செய்ய 7 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 14-ந்தேதி சென்னையில் இருந்து நாகை மாவட்டம் ஒக்கூர், கொட்டாரக்குடி ஆகிய இடத்திற்கு வந்த 2 பேரை வாஞ்சூர் சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

மேலும் 2 பேருக்கு கொரோனா

அதனை தொடர்ந்து அவர்கள் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று பரிசோதனை முடிவில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தநிலையில் பனங்குடி, கொட்டாரக்குடி, சன்னாநல்லூர் ரெயில்வே கேட் ஆகிய 3 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இரும்பிலான தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்