கிருஷ்ணராயபுரம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
கிருஷ்ணராயபுரம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளி மாணவன்
கரூர் அருகே உள்ள திருமாலை வெளியூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆகாஷ்(வயது 11). இவன் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் ஆகாஷ், அவனுடைய அக்காள் நந்தினி மற்றும் சித்தி குடும்பத்தினருடன் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றான். ஆற்றில் அனைவரும் குளித்தபோது, ஆகாஷ் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினான்.
சாவு
உறவினர்கள் அவனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி தேடி, ஆகாசை பிணமாக மீட்டனர். இது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆகாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.