குமரியில் இருந்து தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது
குமரியில் இருந்து தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,
குமரியில் இருந்து தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.
வெளியூர் தொழிலாளர்கள்
கொரோனா பரவலை தடுக்க குமரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் என பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு மக்கள் வாகனங்கள் மூலம் வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பொதுமக்களை மாவட்ட எல்லையான களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் குமரி மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் திருப்பி அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கோட்டாட்சியர் மயில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.