வேதாரண்யத்தில் ரூ.5 கோடியில் பூங்காவுடன் சாலை அமைக்கும் பணி அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு

வேதாரண்யத்தில் ரூ.5 கோடியில் பூங்காவுடன் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு செய்தார்.

Update: 2020-05-15 23:57 GMT
வேதாரண்யம், 

வேதாரண்யத்தில் ரூ.5 கோடியில் பூங்காவுடன் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு செய்தார்.

ஆய்வு

வேதாரண்யம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சமைத்த உணவை சாப்பிட்டார். பின்னர் சிட்டி யூனியன் வங்கி மூலம் வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பில் 200 இடங்களில் வைக்கப்பட உள்ள தானியங்கி கை கழுவும் எந்திரத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.5 கோடியில் வேதாரண்யம் கீழகோபுர வாசலில் இருந்து கடற்கரை செல்லும் 2.5 கிலோ மீட்டர் தூரம் பூங்காவுடன் அமைக்கப்படும் சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

மின்சாரம் வழங்கும் பணி

பின்னர் அமைச்சர் கூறுகையில், இந்த பணிகள் 3 மாதத்தில் முடிவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் அமாவாசை போன்ற புண்ணிய காலங்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக மண்டபம் அமைக்கும் வேலைகள் நடப்பதாகவும், வேதாரண்யம் நகரில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு மின் கம்பங்கள் இல்லாமல் பூமிக்கு அடியில் செல்லும் கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கும் என்றார்.அப்போது நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், வக்கீல்கள் நமசிவாயம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்