கல்பாக்கம் அருகே, செல்போன் பார்த்ததை சகோதரி கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

கல்பாக்கம் அருகே செல்போன் பார்த்ததை சகோதரி கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-15 22:45 GMT
கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 18). பெற்றோரை இழந்த இவர் தனது சகோதரி சித்ரா ஆதரவில் அவருடைய வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மதியம் வெண்ணிலா எப்போதும் போல செல்போன் பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது சகோதரி சித்ரா, எப்போதும் செல்போனை பார்த்து கொண்டிருக்கிறாயே என கேட்டு வெண்ணிலாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனம் உடைந்த வெண்ணிலா விஷம் குடித்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்