பல சவால்களை அறிவித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்திய திருப்பூர் கலெக்டருக்கு மத்திய அமைச்சகம் பாராட்டு

பல சவால்களை அறிவித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தற்காக திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு மத்திய அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.;

Update: 2020-05-15 23:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் சமூக வலைத்தளங்கள் மூலமாக சமூக இடைவெளி குறித்தும் அதன் அவசியம் குறித்தும் உணர்த்தும் விதமாக பல்வேறு விதமான சவால்களை மக்களுக்கு விடுத்திருந்தார்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உணவு தயார் செய்வோம். வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்போம். ஊரடங்கு காலத்தில் நடைபயிற்சி செல்வதற்கு வெளியே சுற்ற வேண்டாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீட்டில் நடைபயிற்சி, சமூக இடைவெளியை பின்பற்ற வீட்டில் இருந்து வெளியே செல்பவர்கள் குடை பிடித்து செல்ல வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்றியதற்கு கவுரவித்து பாராட்டும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கலெக்டரின் செயல்களால் கவரப்பட்ட திருப்பூர் மக்கள் சமூக வலைத்தளத்தில் விஜயகார்த்திகேயன் ஆதரவு அமைப்பு என்ற பெயரில் பக்கம் தொடங்கி கலெக்டருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்களை சிறப்பு தொழிலாளர்கள் என அழைத்து அவர் களை மகிழ்ச்சியாக ரெயிலில் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைத்த வீடியோவையும் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்