தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊரான மணவாத்திப்பட்டிக்கு 20 நாட்களுக்கு முன் 21 பேர் வந்துள்ளனர்.
ஆதனக்கோட்டை,
பெருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட மணவாத்திப்பட்டி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தில் பர்னிச்சர் மற்றும் பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊரான மணவாத்திப்பட்டிக்கு 20 நாட்களுக்கு முன் 21 பேர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மணவாத்திப்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தங்களுடைய தனிமையை ஒரு ஓய்வாக கருதாமல், தங்களது நேரத்தை வீணாக்க நினைக்காத இளைஞர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கொண்டே பள்ளி வளாகத்தை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.மேலும் 25-க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நட்டு பாராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என முடிவு வந்ததால் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.