சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2020-05-14 22:15 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் துணை மின்நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும், 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் குருவேல், பாஸ்கரன், குமார், மலைராஜன் மற்றும் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்