போலீசார் அதிரடி: முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம்

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், ஆர்.சி. புக், லைசென்சு, இன்சூரன்சு ஆகியவை இல்லாவிட்டால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர்.

Update: 2020-05-15 03:37 GMT
திருச்சி, 

திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், ஆர்.சி. புக், லைசென்சு, இன்சூரன்சு ஆகியவை இல்லாவிட்டால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர். முக கவசம் அணியாதவர்களை எச்சரித்து மட்டுமே அனுப்பினர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் போலீசார் இரவு ‘ஹோமிங் ஆபரேஷன்’ சோதனை நடத்தினர். அப்போது பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் முக கவசங்கள் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் ரூ.100 அபராதம் விதித்தனர். அபராத தொகையை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்திட வேண்டும் என்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்