சலவை தொழிலாளர்கள், வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ரூ.2 லட்சத்தில் நிவாரண பொருட்கள்
மா.கோவிந்தராசு எம்.எல்.ஏ. தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பேராவூரணி,
பேராவூரணி பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சலவை தொழிலாளர்கள் 65 பேருக்கும், வாடகை கார் ஓட்டுனர்கள் 110 பேருக்கும், நலிவடைந்த 200 குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி, முட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தலின்படி பேராவூரணி மா.கோவிந்தராசு எம்.எல்.ஏ. தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.திருஞான சம்பந்தம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர், முன்னாள் கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், நகர செயலாளர் வி.என். பக்கிரிசாமி, பெருமகளூர் நகர செயலாளர் ராமமூர்த்தி, அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், நகர மாணவரணி செயலாளர் கோவி.இளங்கோ, அம்மையாண்டி ஊராட்சி மன்ற தலைவர் வை.முத்துராமலிங்கம், எம்.எஸ்.நீலகண்டன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், வாடகை கார் ஓட்டுநர்கள் சங்க கவுரவ தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.