தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம்
தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று புதுவை அரசு உத்தரவிடவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் காவல்துறையினர், சுகாதார துறையினருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
அவர் வேலை இல்லாத நாட்களில் காய்கறி வியாபாரம் செய்வாராம். எனவே அவர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தாரா? என்பது குறித்து விசாரிக்கப்படும். அவர் வசித்த அரும்பார்த்தபுரம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
8 மணிநேரம் வேலை
புதுவை அரசு சார்பில் 8 மணி நேரம் வேலை என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு மேல் பணியாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்தால் இரண்டு மடங்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளோம். மாறாக 12 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடப்படவில்லை.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அது பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியும் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.14½ லட்சம் கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவது சவாலானது. தற்போது கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைத்துள்ளோம். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வருவதில்லை. எனவே மாலையில் ஒரு மணிநேரம் நீட்டித்து கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி விரைவில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.