கட்டுமான தொழில் கடும் பாதிப்பு: சிமெண்டு, கம்பி விலையை குறைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சிமெண்டு, கம்பி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2020-05-14 02:34 GMT
நாகர்கோவில், 

கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சிமெண்டு, கம்பி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கடுமையான விலையேற்றம்

அகில இந்திய கட்டுமான வல்லுனர் சங்க குமரி மாவட்ட தலைவர் ராபர்ட் கென்னடி, முன்னாள் தலைவர் சரவண சுப்பையா, கட்டுமான பொறியாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் ஜேசுராஜ், பதிவு பெற்ற பொறியாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் சிறில் கிறிஸ்துராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் கடுமையாக பாதிப்புக்குள்ளான கட்டுமான துறையை காப்பாற்றிட வேண்டும். இதற்காக கடுமையான விலையேற்றம் பெற்றுள்ள சிமெண்டு, கம்பி, எம்.சாண்ட் விலையை குறைத்திட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 மாத காலம் மூட வேண்டும்

தாறுமாறாக உயர்ந்துள்ள எம்.சாண்ட் மற்றும் ஜல்லி விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்பொது ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் விரைவில் குறைந்த பயணிகளுடன் இயங்க கால் டாக்சி, ஆட்டோ, மேக்சி கேப்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.

பேட்ஜ் லைசென்ஸ் வைத்துள்ள அனைத்து ஓட்டுனர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை ரூ.20 ஆயிரமாக வழங்க வேண்டும். பொதுமக்கள் பெரும் பொருளாதார பின்னடைவில் இருப்பதன் காரணத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் குறைந்தபட்சம் 3 மாத காலத்துக்கு மூட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்-அமைச்சருக்கும் அவர்கள் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்