பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் - கலெக்டருக்கு கோரிக்கை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடமிருந்து இருந்து பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை வழக்குகள் இல்லாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-14 00:15 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சமூக பேரவை தலைவர் ஏ.ஞானமோகன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சிவன்அருளை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஐகோர்ட்டு உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை வாபஸ் பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடமிருந்து இருந்து பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை வழக்குகள் இல்லாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அம்மா உணவகங்களில் வழங்கப்படுவது போல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடியில் உணவு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, ரூ.1000 போதுமானதாக இல்லை. 

எனவே ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்