கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புதுவை பாரதி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-05-13 23:22 GMT
புதுச்சேரி,

அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புதுவை பாரதி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் மோதிலால் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ஆறுமுகம், அருள், குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர்களுக்கு ஊதிய வெட்டு, அகவிலைப்படி நிறுத்தம் செய்யக்கூடாது. சங்கம் அமைத்திடும் உரிமையை ரத்து செய்யக்கூடாது. ஆலை உரிமையாளர்களின் விருப்பம்போல் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ய அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்