சின்னசேலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
சின்னசேலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்.
சின்னசேலம்,
சின்னசேலம் வட்டார வேளாண்மை துறை மூலம் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் 2020-21-ம் ஆண்டுக்கான மண்வள அட்டை திட்டத்தின் கீழ் சின்னசேலம் வட்டாரத்தில் உள்ள பெத்தானூர், கால சமுத்திரம், செம்பாக்குறிச்சி, வி.பி.அகரம் மற்றும் குதிரைச்சந்தல் ஆகிய கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சின்னசேலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தார்.
பின்னர் அவர்கள் விளை நிலத்தில் இருந்து மண் மாதிரி எடுக்கும் முறைகள், மண் ஆய்வு செய்வதன் அவசியம் குறித்தும், மண் மாதிரி ஆய்வின்படி மேற்கொள்ளப்படும் பயிர் சாகுபடி குறித்தும் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துக்கூறினர்.மேலும் கோடை உழவு பணிகள் தீவிரமாக நடைபெறும் இந்நேரத்தில் மண் மாதிரிகள் சேகரிக்க ஏற்ற காலமாகும். எனவே மண் மாதிரிகள் சேகரிப்பு பணி வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வந்ததும், பயிர் சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.