அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வுக்கு எதிர்ப்பு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-05-13 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி இருப்பதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

மாவட்டக்குழு உறுப்பினர் ஆசாத், மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர குழு உறுப்பினர்கள் ராம்குமார், ஜேம்ஸ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி மாதாங் கோவில் ரோடு படித்துறை அருகில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், வயிற்றில் ஈரத்துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட் டக்குழு உறுப்பினர் தினேஷ் குமார் தலைமை தாங்கி னார்.

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியதால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறாமல் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். எனவே அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்த கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர், கிளை செயலாளர் ஜெய்லானி கனி, நிர்வாகிகள் கருத்தப்பாண்டி, கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்