கோவை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் ரூ.50 லட்சம் அபராதம் வசூல்
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து, இதுவரை ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 26,374 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது கோவை நகரில் ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்ததாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர். 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை நகரில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று முன்தினம்வரை 6,476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,766 பேர் கைது செய்யப்பட்டனர். 6,582 வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை புறநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 82 இருசக்கர வாகனம், 3 நான்குசக்கர வாகனம் உள்பட 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 23,815 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26,374 பேர் கைது செய்யப்பட்டனர். 23,143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.50 லட்சத்து 11 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தகவலை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.