கிருஷ்ணகிரியில் கேண்டீனில் பொருட்கள் பெற டோக்கன் வாங்க குவிந்த முன்னாள் ராணுவவீரர்கள்
கிருஷ்ணகிரியில் உள்ள கேண்டீனில் பொருட்கள் பெற முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தோர் டோக்கன் வாங்க குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் பெங்களூரு சாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் சலுகை விலையில் பொருட்கள் பெறுவதற்கான கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்துள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கேண்டீன் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் கேண்டீன் திறக்கப்பட்டு, பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொருட்களை வாங்க கேண்டீன் முன்பு குவிய தொடங்கினார்கள்.
மூட உத்தரவு
இதைத் தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கேண்டீன் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும், டோக்கன் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் நேற்று அதிகாலை 3 மணி முதலே டோக்கன் பெறுவதற்காக அந்த திருமண மண்டபத்தின் முன்பு குவிந்தனர்.
சமூக இடைவெளியை பின்பற்றப்படாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருந்தனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இவ்வாறு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் படை வீரர்கள் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கேண்டீனை வருகிற 31-ந் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் டோக்கன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் நேற்று காலையில் பரபரப்பாக காணப்பட்டது.